ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிப்பதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல் இருந்தால் அதுகுறித்து அருகில் உள்ள இபிஎஃப் அலுவலகத்தை தொடர்புகொண்டு முறையிடலாம் என்று வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை -புதுச்சேரி கூடுதல் மத்திய ஆணையர் கே.வி.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் தங்கள் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம். ஓய்வூதியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆன்-லைன் மூலம் டிஜிட்டல் முறையில் இதனை சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சான்றிதழை இபிஎஃப் அலுவலகங்கள், வங்கிக் கிளைகள், இ-சேவை மையங்கள், மத்திய அரசின் சேவை மையங்கள் மூலமும், மஙஅசஎ என்ற செயலி மூலமும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நேரடியாக விண்ணப்பமாகவும், முடியாத சிலருக்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று அதிகாரிகள் மூலம் உயிர்ச் சான்றிதழ் பெறவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
எனினும் இபிஎஃப் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 80 சதவீத ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்ச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காதது தெரியவந்துள்ளது. அதாவது இந்த ஓய்வூதியர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருப்பதில் வேறு சில காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே, இபிஎஃப் அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் குறைகள் ஏதேனும் உள்ளதா? அல்லது உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை இதுவரை தங்களின் உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள் அருகில் உள்ள இபிஎஃப் அலுவலகத்திலோ அல்லது ஹஸ்ரீஸ்ரீ.ற்ய்ந்ழ்ஃங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்

வியக்க வைக்கும் வெட்டாறு பாலம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


