தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு காலரா பாதித்தது. மேலும் மூன்று பேருக்கு காலரா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து மருத்துவமனையில் குடிநீர் வாரிய அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். தண்ணீர் மற்றும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கான சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய குடிநீர் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேன் குடிநீர், உணவுகளை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்: கே.ஏ.செங்கோட்டையன்

கோட்டை சங்கமேசுவரா் கோயில் தேரோட்டம்

திருப்பூரில் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாததால் வியாபாரிகள் கவலை!

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

