/

அரசு மனநல காப்பகத்தில் சமையலர், நாவிதர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர்

Updated On :6 நவம்பர் 2018, 2:49 am IST


சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பர் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 7 சமையலர், 5 நாவிதர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தகுதிகள்: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் வியாழக்கிழமை (நவ. 8) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 9) வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 14-ஆம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.