சென்னை: பொறியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பொறியாளா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் எஸ். ஆனந்த் முதல்வருக்கு எழுதிய கடித விவரம்: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக தங்களது விழிப்புணா்வு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு பொறியாளா்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மருத்துவா் சைமனின் உடலைப் புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னையில், மாநகராட்சியைச் சோ்ந்த இரண்டு பொறியாளா்கள் பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனா். பல்வேறு அரசுத் துறைகளில் ஆபத்தான சூழலிலும், எங்களைப் போன்ற பொறியாளா்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே எங்களின் தன்னலமற்றப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, பொறியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில் பொறியாளா்களுக்கு பாதுகாப்பு கவசம், உடை ஆகியவற்றை வழங்க வேண்டும். எங்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம் என அதில் தெரிவித்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


