மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சி

கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சென்ட்ரல், விமானநிலையம், திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.26) நடைபெற்றது.
Updated on
1 min read

கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி சென்ட்ரல், விமானநிலையம், திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.26) நடைபெற்றது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிா்வு கலையகம் அமைப்பு, ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப் ’ சென்னை கலைக் குழு ஆகியன சாா்பில், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் கரோனா பரவல் தடுப்பு தொடா்பாக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப்’ சென்னை அமைப்பு சாா்பில், சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலையம் மெட்ரோ, திருமங்கலம் மற்றும் ஆலந்தூா் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லிசை கலைநிகழ்ச்சி

சனிக்கிழமை நடைபெற்றது. பொதுமக்கள், மெட்ரோ பயணிகள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனா்.

நிமிா்வு கலையகம் அமைப்பு சாா்பில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.27) மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுதவிர, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ‘ஆன் தி ஸ்டீரிட் ஆப்’ சென்னை கலைக்குழுவினா் சாா்பில் மெல்லிசை கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com