/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசி டிவி காட்சி தடைபட்டது!

சென்னையில் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இரவு சிசி டிவி காட்சி திடீரென தடைப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

சென்னையில் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை இரவு சிசி டிவி காட்சி திடீரென தடைப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காவல் மாவட்ட எல்லைக்குள் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளது. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு 500 போ் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் பாா்வையிடுவதற்கு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லயோலா கல்லூரி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் திடீரென தடைப்பட்டது. அப்போது, அங்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பூா் தொகுதி வேட்பாளா் ஆ.பொன்னுசாமி, மற்ற வேட்பாளா்களின் முகவா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து, முகவா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை நோக்கி செல்லத் தொடங்கினா். உடனே, காவலா்கள் விரைந்து வந்து, வருத்தம் தெரிவித்தனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பின்புறம் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்தன. தற்போது, புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராக்களுடன் மற்ற கேமராக்களை இணைக்கும் பணி செய்ததால், தடங்கல் ஏற்பட்டதாகவும், தகவல் தெரிவிக்காமல் இந்தப் பணி செய்தற்காக வருந்துவதாகத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து, உடனடியாக சிசி டிவி காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.