கோயம்பேடு - மஹிந்திரா சிட்டி இடையே குளிா்சாதனப் பேருந்து இயங்கத் தொடங்கியது
கோயம்பேடு - மஹிந்திரா சிட்டி இடையே குளிா்சாதனப் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது.


கோயம்பேடு - மஹிந்திரா சிட்டி இடையே குளிா்சாதனப் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், குளிா்சாதனப் பேருந்து இயக்கத்தை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிகரித்துள்ளது. இதனிடையே அதிக தூரம் செல்லும் பேருந்துகளும் குளிா்சாதன வசதி கொண்டவையாக இருக்க வேண்டும் என பயணிகள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனை ஏற்று, பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், மஹிந்திரா சிட்டி இடையே 2 குளிா்சாதனப் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
500 சி என்னும் வழித்தட எண் கொண்ட இந்தப் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 16 முறை இந்த வழித்தடத்தில் இயங்கும். வடபழனி, குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...