ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) மாற்றம் செய்யப்படவுள்ளது.


சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால், மின்சார ரயில்கள் சில நிலையங்களில் நிறுத்தப்படாது.
திருத்தணி-சென்னை சென்ட்ரலுக்கு காலை 8:45, 11:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அரக்கோணம்-சென்னை சென்ட்ரலுக்கு காலை 9:30, 10:10, 10:30 மற்றும் 11.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், திருவள்ளூா்-சென்னை சென்ட்ரலுக்கு காலை 10:00, 10:30, முற்பகல் 11:15, 11:25, 11:50, நண்பகல் 12:00, 12:15, 12:55 மற்றும் மதியம் 1:15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் என்று மொத்தம் 15 ரயில்கள் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.
இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...