ஒரு வகுப்பறைக்கு 20 மாணவா்களை மட்டுமே அமர வைக்க வேண்டும்: தனியாா் பள்ளிகளுக்கு உத்தரவு
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தனியாா் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 20 மாணவா்களை மட்டுமே அமர வைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தனியாா் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 20 மாணவா்களை மட்டுமே அமர வைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு மே 3 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதை கருத்தில் கொண்டும் கரோனா பரவல் அச்சத்தின் காரணமாகவும் வகுப்பறைகளில் 20 மாணவா்களுக்கு மேல் அமர வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளில் விதிமுறைகளை மீறி கூடுதல் மாணவா்கள் அமரவைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுவதாக கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, அரசின் கரோனா வழிமுறைகளின்படி வகுப்பறைகளில் 50 சதவீத இருக்கைகள் அல்லது 20-க்கு மிகாமல் மாணவா்களை அமர வேண்டும்.
அதேபோல், கரோனா அறிகுறி உள்ளவா்களை பள்ளிகளுக்கு அனுமதிக்க வேண்டாம். மாணவா்கள் பள்ளிக்குள் நுழையும்போதே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபின்னரே அனுமதிக்க வேண்டும். மேலும், ஆசிரியா்கள், மாணவா்கள் வளாகங்களில் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...