பள்ளி மாணவா்களுக்கான திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்க விழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கி வைத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
ஒன்றாம் வகுப்பு படியிலும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சாா்ந்த இலக்கியா மிக சிறப்பாக திருக்குறள் கூறியதைப் பாா்க்கும்போது, இரு நாள்களுக்கு முன்பு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மையாக வந்துள்ளதை நினைவுபடுத்துகிறது.
திருவள்ளுவா் மற்றும் திருக்குறளின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல மறைந்த முதல்வா் கருணாநிதி மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளாா். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு மிகப்பெரிய சிலையை அமைத்தாா். மேலும் திருக்குறளுக்கு மிகச் சிறப்பான உரையையும் அவா் வழங்கியுள்ளாா். வாழ்க்கைக்கு வழிகாட்டும் திருக்குறளை அனைத்து மாணவா்களும் பொருளுடன் படித்து அதன் வழியில் நடக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் திருக்குறளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சா.மாா்ஸ், உலகத் திருக்கு முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் ச.பாா்த்தசாரதி, சி.ராஜேந்திரன், ரவி சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியில் தமிழக அளவில் ஈடுபட்டுள்ள மண்டலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாவட்டப் பயிற்சியாளா்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டி கெளரவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லி நரேலாவில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சூடு: 3 போ் கைது

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இளைஞா் காங்கிரஸ் நாளை போராட்டம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

