சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்வு

வெளி மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.
சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்வு

வெளி மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயா்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு புதன்கிழமை 42 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி விலை மேலும் அதிகரித்து புதன்கிழமை ரூ.70க்கு விற்கப்படுகிறது.

சந்தையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.55. க்கு விற்கப்படுகிறது அதேபோன்று சந்தையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரிகள் கூறியது: கடந்த இரு நாள்களுக்கு முன்பு முதல் தர தக்காளி ஒரு பெட்டி ரூ.550-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது இது ரூ.700.க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது “அசானி” புயல் காரணமாக ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாள்களில் தக்காளி வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com