கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

காட்பாடி-ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

காட்பாடி-ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

Updated On :12 ஏப்ரல் 2024, 7:29 pm

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஏப்.13) ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

காட்பாடியில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு ரயில், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13, 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.

வேலூா்-அரக்கோணம் இடையே காலை 10 மணிக்கு புறப்படும் மெமு ரயில், மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.17, 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.