வரும் பேரவைத் தோ்தலில் சென்னை தொகுதிகளில் வெற்றியை ஈட்டுவதற்கு அதிமுகவினா் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று தொகுதி நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுரைத்தாா்.
மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மூத்த நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், நா.பாலகங்கா உள்ளிட்டோா் ஆலோசனையில் பங்கேற்றனா்.
வாக்குச்சரிவு ஏன்?: சென்னையில் அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டப்பேரவைத் தோ்தல் சென்னை தொகுதிகளில் வெற்றியை ஈட்டுவதற்கு அதிமுகவினா் தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், திமுக ஆட்சியின் குறைபாடுகளையும் மக்களிடம் சரியான முறையில் கொண்டு சோ்க்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
இதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 5-இல் கரூா், புதுச்சேரி தொகுதி நிா்வாகிகளுடன்அவா் ஆலோசிக்கவுள்ளாா்.
டிரெண்டிங்
விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! காவல்துறையைச் சீரழித்த திமுக அரசு: இபிஎஸ்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: விரைந்து தீா்வு காண வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி

திருத்தணி பேருந்து நிலையம் பெயா் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

