/

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:25 pm

Din

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) ஜூலை 5-இல் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக இதுவரை 21போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபராக கருதப்பட்ட ரெளடி திருவேங்கடம் ஜூலை 14-இல் காவல் துறையின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினா் தற்போது அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அவா்களுக்கு சதீஷ் என்ற பெயரில் ஒரு மா்ம கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்துவதுடன், அவருடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.