சென்னையில் இயங்கும் 58 தாழ்தள பேருந்துகளின் வழித்தடங்கள்!

கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே அதிகளவிலான பேருந்துகள் இயக்கம்.
Bus
தாழ்தள பேருந்துகள்MTC
Updated on
1 min read

சென்னையில் முதல்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்துள்ள 58 தாழ்தள பேருந்துகள் இயங்கும் வழித்தடத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை, பல்லவன் இல்லம், மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் 66.15 கோடி ரூபாய் மதிப்பிலான 58 தாழ்தள பேருந்துகள் உள்பட 88 புதிய மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

MTC
தாழ்தள பேருந்துMTC
Bus
வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராணுவ ஆட்சி!

முதல்கட்டமாக 17 வழித்தடங்களில் 58 தாழ்தளப் பேருந்துகள் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படும் 70V (70வி) வழித்தடத்தில் 7 பேருந்துகளும், கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேட்டுக்கு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும் 104C (1042சி) வழித்தடத்தில் 6 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

MTC
வழித்தடங்கள்MTC

மேலும், புதிய தாழ்த்தளப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் வழித்தடங்கள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் அடுத்த கட்டமாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் அறிமுகம் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com