மின்சாரம் பாய்ந்து மென்பொறியாளா் உயிரிழப்பு
சென்னை அருகே மேடவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து மென்பொறியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.


சென்னை: சென்னை அருகே மேடவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து மென்பொறியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த வீரசக்திவேல் (22), மேடவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தாா். மென்பொறியாளரான இவா், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய அவா் கடையில் வாங்கி வந்த உணவை சாப்பிட்டுவிட்டு நெகிழிப் பையை வெளியில் வீசியுள்ளாா். வெளியிலிருந்த மின் கம்பியில் நெகிழிப் பை சிக்கிக் கொண்ட நிலையில், அதை அலுமினியக் கம்பி மூலம் அகற்ற முயலும்போது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தாா்.
அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வீரசக்திவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...