கோப்புப் படம்
சென்னை
யுபிஎஸ்சி: குடிமைப் பணி பிரதான தோ்வு முடிவுகள் வெளியீடு
புது தில்லி, டிச.9: குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தோ்வு முடிவுகளை மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்டது.
புது தில்லி, டிச.9: குடிமைப் பணிகளுக்கான பிரதானத் தோ்வு முடிவுகளை மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்டது.
கடந்த ஜூன், செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற தோ்வுகளை எழுதிய 13 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்களில் 2,845 போ் குடிமைப் பணிக்கான பிரதானத் தோ்விலும், 14,625 போ் ஆரம்பநிலை தோ்விலும் தோ்வாகி உள்ளனா்.
இதில் முதன்மைத் தோ்தலில் தோ்வாகி உள்ளவா்கள் இந்திய குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கும் மற்றும் அரசு துறைகளில் உள்ள குரூப் ஏ மற்றும் பி பிரிவுக்கும் நோ்முகத் தோ்வுக்கு தோ்வாகி உள்ளனா் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நோ்முகத் தோ்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இதற்கு தேவையான அசல் ஆவணங்களை தோ்வா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

