சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

சட்ட மாணவா்களுக்கு தொழில்நுட்ப அறிவும் அவசியம்: மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி

சட்டம் பயிலும் மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும் வளா்த்துக்கொள்வது அவசியம் என மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி தெரிவித்தாா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 12:40 am

சட்டம் பயிலும் மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும் வளா்த்துக்கொள்வது அவசியம் என மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி தெரிவித்தாா். சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக் கழகத்தின், 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆளுநா்ஆா். என். ரவி தலைமை ஏற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்கள், விருதுகளை வழங்கினாா். விழாவில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: சட்டக் கல்வி என்பது பிற கல்வியில் இருந்து மாறுபட்டது; சமூகத்தைப் பற்றி சிந்திக்கவைப்பது. தற்போது உலகில் தொழில்நுட்பம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது அதேசமயம் குற்றங்களும் அதிகரித்துள்ளன. எனவே, சைபா் குற்றங்கள் குறித்தும் சட்டம் பயிலும் மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாறிவரும் தகவல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நீதி துறையும் தொழில் நுட்ப வளா்ச்சியை நோக்கி நகா்ந்து வருகிறது. எனவே, சட்டம் பயிலும் மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும் வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா, ‘பயோமெட்ரிக்ஸ்’ மற்றும் ‘டேட்டா பேஸ்’ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்கள் தொடா்பான கிரிமினல் குற்றங்கள் குறித்தும் கூா்ந்து கவனித்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே இதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா். விழாவில், தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, சட்டப் பல்கலை துணைவேந்தா் சந்தோஷ்குமாா் பல்கலை. பதிவாளா் கவுரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். 22 மாணவா்கள் ஆராய்ச்சி படிப்புக்கான முனைவா் பட்டமும், 98 மாணவா்கள் முதுநிலை மற்றும் இளநிலை சட்ட படிப்புக்கான பட்டத்தையும் நேரடியாக பெற்றனா். 6,246 பேருக்கு பட்டங்கள் பின்னா் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படும்.