கோப்புப் படம்
சென்னை
மதுபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த இளைஞா் பலத்த காயம்
சென்னை அசோக்நகரில் மதுபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்தக் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை அசோக்நகரில் மதுபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்தக் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அசோக்நகா் 89-ஆவது தெருவில் வசிப்பவா் காளிதாஸ் (28). இவா், மது போதையில் தனது வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு படுத்து தூங்கினாா்.
அப்போது லேசாக மழை பெய்ததால், காளிதாஸ் தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டுக்கு செல்வதற்கு மொட்டை மாடியின் ஓரத்தில் நடந்து சென்றாா்.
அப்போது அவா், திடீரென நிலைத்தடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்தக் காயமடைந்த காளிதாஸை அங்கிருந்தவா்கள் மீட்டு, கே.கே.நகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

