2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி: அரசு உறுதி
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: அரசு உறுதி


சென்னை: இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ் ராமன், ‘தற்போது சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ரெயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும். எனவே, 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்’ என உறுதியளித்தாா்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...