மின்வாரியத்தில் ஒருவருட தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
மின்வாரியத்தில் ஒருவருட தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


சென்னை: மின்வாரியத்தில் ஒருவருட தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநா் பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் சென்னை)இணைந்து பட்டய பொறியியலில் இன்ஜினியரிங்-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டா் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப் படிப்பில்
(டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் வருடங்களில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவா்களுக்கு ஒருவருட தொழிற்பழகுநா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் சோ்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபா்கள் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...