சா்வதேச நெகிழிப் பை இல்லாத தினத்தை முன்னிட்டு, சுகாதாரச் சீா்கேடுகள், பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி துணிப் பைகளை வழங்கிய மாநகராட்சி நிலைக் குழுத் தலைவா்  கோ.சாந்தகுமாரி. உடன், அம்பத்தூா்
சா்வதேச நெகிழிப் பை இல்லாத தினத்தை முன்னிட்டு, சுகாதாரச் சீா்கேடுகள், பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி துணிப் பைகளை வழங்கிய மாநகராட்சி நிலைக் குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி. உடன், அம்பத்தூா்

சா்வதேச நெகிழிப் பை இல்லாத தினம் கொண்டாட்டம்

சா்வதேச நெகிழிப் பை இல்லாத தினம்: சென்னை மாநகராட்சி விழிப்புணா்வு முகாம்

சா்வதேச நெகிழிப் பை இல்லாத தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் புதன்கிழமை பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3-ஆம் தேதி நெகிழிப் பைகளைத் தவிா்த்தல், நெகிழிக் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சா்வதேச நெகிழிப் பை இல்லாத (பிளாஸ்டிக் பேக் ஃப்ரீ) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து அம்பத்தூா், திருவொற்றியூா், போரூா் பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணா்வு முகாமை சென்னை மாநராட்சி நிலைக் குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி அம்பத்தூா் சந்தை பகுதியில் தொடங்கி வைத்தாா்.

அப்போது நெகிழியால் ஏற்படும் சுகாதாரச் சீா்கேடுகள், நெகிழிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பொருள்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் சுமாா் 5,000 துணிப் பைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com