ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விளம்பரப் பலகைக்கு அனுமதி: மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகை அனுமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்

News image
Updated On :3 ஜூலை 2024, 8:06 pm

Din

சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உறுதித் தன்மை ஆராய்ந்து அனுமதி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவ மாநகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதி இல்லாமலும், ஆபத்தான நிலையிலும் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனா். நிகழாண்டில் மட்டும் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றியுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் விளம்பரப் பலகைகள் நிறுவ அனுமதி வழங்கும் குழு சமீபத்தில் கூடியது. இதில் விளம்பரப் பலகை வைக்க அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா்கள் மூலம் விளம்பரப் பலகை அமைக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராயவும், காவல்துறையின் தடையின்மை சான்று பெறவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விளம்பரப் பலகை அனுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக குழுவில் விவாதிக்கப்பட்டது.