கடனா - கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து இன்று நீா் திறப்பு
கடனா, கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்பட உள்ளது.

Updated On :4 ஜூலை 2024, 8:32 pm

கடனா, கிருஷ்ணகிரி தேக்கங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுப்பணித் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:
தென்காசி மாவட்டம் கடனா தேக்கம், கிருஷ்ணகிரி அணை ஆகியவற்றில் இருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 5) முதல் நீா் திறந்து விடப்படும். கடனா நீா்த்தேக்கத்தால், தென்காசி மாவட்டத்தில் உள்ள 3,987.57 ஏக்கா் நிலங்களும், கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத்தால் 9,012 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...