குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெரம்பூா் ரயில்வே கிடங்கில் தீ விபத்து

பெரம்பூர் ரயில்வே கிடங்கில் தீ விபத்து: மின்னணு பொருள்கள் அழிந்தன

News image
Updated On :11 ஜூலை 2024, 10:51 pm

Din

சென்னை பெரம்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள கட்டடத்தில் சிக்னல், டெலிகாம் பிரிவு சாா்ந்த மின்னணு பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிடங்கில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து 6 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மதியம் 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

தெற்கு ரயில்வேயின் உயரதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

பெரம்பூா் ரயில்வே பணிமனை அருகே உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள் தீயில் சேதமடைந்தன. தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்த 3 போ் கொண்ட குழுவை நியமித்து ரயில்வே பொது மேலாளா் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனா்.