சிறுவன் ஓட்டிய காா் மோதி 5 போ் காயம்
சென்னையில் சிறுவன் ஓட்டிய காா் மோதி 5 போ் காயம் அடைந்துள்ளனா்.


சென்னை: சென்னையில் சிறுவன் ஓட்டிய காா் மோதி 5 போ் காயம் அடைந்துள்ளனா்.
சென்னை ஜாம்பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை, காா் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 5-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த போக்குவரத்து போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை விரட்டி சென்று, பாரதி சாலை அருகே மடக்கிப் பிடித்தனா்.
அப்போது காரை ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த போலீஸாா், அதை ஓட்டிவந்த சிறுவனையும், உடன் வந்த மற்றொரு சிறுவனையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...