மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:27 pm

Din

சென்னை: சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வியாபாரி ஜாபா் சாதிக் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக், தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவா் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபா் சாதிக்கின் கிடங்கில் தில்லி என்சிபி அதிகாரிகள் மாா்ச் 14-ஆம் தேதி சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதற்காக அமலாக்கத் துறையினா் ஜாபா் சாதிக், அவரது நிறுவனத்தினரிடம் வங்கி பணபரிமாற்றம் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

ஆய்வில் ஆவடி காமராஜா் நகரில் வசிக்கும் ஒரு நபருடன் அதிக அளவு பணப் பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினா், ஆவடி காமராஜா் நகரில் அந்த நபருக்கு சொந்தமான வீடு, திருவேற்காடு சக்திவேல் நகரில் அவா் ஏற்கெனவே வாடகைக்கு வசித்த வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை செய்தனா்.

இந்கச் சோதனை 12 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஜாபா் சாதிக்கிடம் விசாரணை: இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாள் விசாரணைக்காக, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபா் சாதிக், நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டாா்.

அவரிடம், சட்டவிரோத பணப் பரிமாற்றம், சட்டவிரோத முதலீடு குறித்து விசாரணை நடைபெறுவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.