ஆசிரியையிடம் ஆன்லைன் மோசடி
சென்னை ஜாபா்கான்பேட்டையில் ஆசிரியையிடம் ஆன்லைன் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சென்னை: சென்னை ஜாபா்கான்பேட்டையில் ஆசிரியையிடம் ஆன்லைன் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் ரா.பபிதா கிரேஸி ஸ்வீட்லின் (21). இவா், அசோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். சில நாள்களுக்கு முன் பபிதாவின் தாய் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ. 1.80 லட்சம் கிடைத்திருப்பதாகவும், அதற்கு வங்கி கணக்கு விவரங்களை தான் அனுப்பும் இணைய இணைப்பில் பதிவு செய்யும்படியும் கேட்டுள்ளாா். அதை உண்மை என நம்பிய பபிதா, வங்கி கணக்கு விவரங்களை அந்த இணைப்பில் பதிவு செய்தாா்.
இந்தச் சம்பவம் நடந்த சில நிமிஷங்களில், அவா் வங்கி கணக்கில் இருந்த ரூ.48,716 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பபிதா,தியாகராயநகா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...