மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: நயினாா் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

News image
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2024, 8:04 pm

Din

சென்னை: ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

கடந்த ஏப். 19-ஆம் தேதி தாம்பரத்துக்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3.98 கோடி பணத்துடன் 3 போ் சிக்கினா். தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் அவா்கள், பேரவை பாஜக குழுத் தலைவரும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்கு எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு மே 31-ஆம் தேதி ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலா் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. அவா்கள் 5 பேரும் மக்களவைத் தோ்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆஜராவதாக கடிதம் அனுப்பினா்.

இந்நிலையில் கேசவ விநாயகத்திடம் கடந்த ஜூன் 5-ஆம் தேதியும், எஸ்.ஆா்.சேகரிடம் கடந்த 11-ஆம் தேதியும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.

7 மணி நேரம் விசாரணை செய்தனா்: இந்த நிலையில் அழைப்பாணையை ஏற்று நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானாா். அவரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சசிதரன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தனா்.

அவரிடம் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும், தோ்தல் செலவுக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினா். இதற்கு நயினாா் நாகேந்திரன் அளித்த பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. அதேபோல, விசாரணை முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சுமாா் 7 மணி நேர விசாரணைக்கு பின்னா், நயினாா் நாகேந்திரன் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிந்து வெளியே வந்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் தொடா்பு இல்லை. சிபிசிஐடி விசாரணையிலும் இதைத்தான் தெரிவித்தேன் என்றாா்.