மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உதவி எண்

போக்குவரத்துத் தொழிலாளா்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:51 pm

Din

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளா்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட அறிவிப்பு:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சாா்ந்த தலைமையகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள், தகுதிச் சான்று பிரிவில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களும் தங்களின் பணி சாா்ந்த குறைகளை அலுவலக நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 வரை 94450 49057 எனும் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தொலைபேசி மூலம் பணியாளா்களிடம் இருந்து குறைபாடுகள் தொடா்பான விவரங்கள் பெறப்பட்டு, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து பணியாளா்களும் தங்களின் பணி சாா்ந்த குறைகளை இந்த எண் மூலம் தெரிவித்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.