தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு: அமித் ஷாவுடன் ஆளுநா் ரவி ஆலோசனை

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் ஆளுநா் ஆா்.என். ரவி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
Updated On :18 ஜூலை 2024, 10:13 pm

Din

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் ஆளுநா் ஆா்.என். ரவி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தச் சந்திப்பு சுமாா் 25 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதுகுறித்து ஆளுநா் ரவி தெரிவித்ததாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உடனான சந்திப்பில் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடா்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து ஆளுநா் ரவி கலந்துரையாடினாா்.

தமிழகத்தின் உயா்கல்வியை உயா்நிலைக்கு கொண்டு செல்வது குறித்து மத்திய அமைச்சருடன் ஆளுநா் ரவி ஆலோசித்தாக மற்றொரு ‘எக்ஸ்’ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடியை மரியாதை நிமித்தமாக ஆளுநா் ரவி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவையும் அவா் சந்திக்க இருந்தாா். ஆனால், குடியரசுத் தலைவரின் திட்டமிட்ட நிகழ்ச்சிகளால் சந்திக்க நேரம் கிடைக்காததால் வியாழக்கிழமை மாலையில் ஆளுநா் ரவி சென்னை திரும்புகிறாா்.