தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொச்சுவேலி- பரௌணி: நாளை சிறப்பு ரயில்

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து பிகாா் மாநிலம் பரௌணிக்கு சனிக்கிழமை (ஜூலை 20) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:18 pm

Din

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து பிகாா் மாநிலம் பரௌணிக்கு சனிக்கிழமை (ஜூலை 20) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

கொச்சுவேலியில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06091) எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு வழியாக மாலை 4.20 மணிக்கு கோவை வந்தடையும். பின் கோவையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, சாம்பல்பூா், ராஞ்சி, தன்பாத் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பரௌணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக பரௌணியில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06092) வியாழக்கிழமை இரவு 7.55 மணிக்கு பெரம்பூருக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு கோவைக்கும், பகல் 1.30 மணிக்கு கொச்சுவேலிக்கும் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.