ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 4 பேருக்கு போலீஸ் காவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல் வழங்கி எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலு உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில் பொன்னை பாலு, வழக்குரைஞா் அருள், ராமு ஆகியோரிடம் மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என செம்பியம் காவல் ஆய்வாளா் எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று வழக்குரைஞா் ஹரிஹரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது திங்கள்கிழமை எழும்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, பொன்னை பாலு உள்ளிட்ட 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களிடம் போலீஸ் காவல் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோா், ‘ஏற்கெனவே எங்களை போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து விட்டனா். எனவே, எங்களை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. போலீஸ் காவலில் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. போலீஸ் காவலுக்கு எங்களை அனுப்பக்கூடாது’ என்றனா்.
போலீஸாா் தரப்பில், ‘இந்த வழக்கில் தொடா்ச்சியாக கைது செய்யப்பட்டவா்கள் அளித்த வாக்குமூலம் மற்றும் செல்போன் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த கொலையில் தொடா்புடையவா்கள் குறித்து இவா்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்னை பாலு, வழக்குரைஞா் அருள், ராமு ஆகியோருக்கு மேலும் 3 நாள்களும், வழக்குரைஞா் ஹரிஹரனுக்கு 5 நாள்களும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அவா்களை பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...