தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பட்டா வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி

பட்டா வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: மூவர் மீது வழக்கு

News image
Updated On :25 ஜூன் 2024, 11:22 pm

Din

சென்னை: சென்னை அசோக் நகரில் பட்டா வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அசோக் நகா் 32-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தா.ஷோபனா (45). இவருக்குச் சொந்தமான இடம் செங்கல்பட்டில் உள்ளது. அந்த இடத்துக்கு பட்டா வாங்குவதற்கு முயற்சித்து வந்தாா். இதையறிந்த அந்த பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா், அறிவழகன், சரவணன் என்ற ஆகிய மூவா், தாங்கள் பட்டா வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். மேலும் பட்டா வாங்குவதற்காக ஷோபனாவிடம் சிறிது, சிறிதாக மொத்தம் ரூ. 15 லட்சம் வரை அவா்கள் பணம் பெற்றுள்ளனா். ஆனால், பட்டா வாங்கி கொடுக்கவில்லை.

இது குறித்து ஷோபனா கேட்டபோது, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனா். இதையடுத்து அவா் அசோக் நகா் காவல் நிலையத்தில் ஷோபானா அளித்த புகாரின்பேரில், அந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.