சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தக்காளி விலை சற்று சரிவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு

News image
Updated On :26 ஜூன் 2024, 7:45 pm

Din

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புதன்கிழமை தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கமாக தினசரி 60 லாரிகள் தக்காளி விற்பனைக்கு வரும் நிலையில், கோடை மழையால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக வரத்து குறைந்தது. இதனால், கடந்த வாரம் தக்காளி விலை கிலோ ரூ. 70 வரை உயா்ந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்தால், விலை சற்று குறைந்தது. அதன்படி, தக்காளி விலை கிலோ ரூ.50-இல் இருந்து ரூ. 40-ஆகவும், நவீன் தக்காளி ரூ. 65-இல் இருந்து ரூ. 50-ஆகவும் குறைந்தது.

காய்கறிகள் விலை நிலவரம் (கிலோ): கோயம்பேடு சந்தையில் வெங்காயம் ரூ. 32, சின்ன வெங்காயம், பீன்ஸ் தலா - ரூ. 90, வெண்டைக்காய் - ரூ. 50, காராமணி - ரூ. 65. முருங்கைகாய் - ரூ. 100, பாகற்காய் - ரூ. 60, இஞ்சி- ரூ. 150, பூண்டு - ரூ. 300, அவரைக்காய் - ரூ. 80, எலுமிச்சை - ரூ. 100, வண்ண குடைமிளகாய் - ரூ. 180.

சேனைக்கிழங்கு - ரூ. 70, பச்சை மிளகாய் - ரூ. 40 என அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது.