தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்த திட்டம்

தமிழக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் ஊதியம் உயர்த்த கோரிக்கை

News image
Updated On :27 ஜூன் 2024, 9:25 pm

Din

கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,000 வழங்க வேண்டும் என்று தமிழக டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அதை வலியுறுத்தி ஜூன் 30-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் ஜெயவேல், மருத்துவத் துறை பணியாளா் கூட்டமைப்பின் செயலா் டாக்டா் சாந்தி ஆகியோா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 38,000-க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டை கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவா்கள் செய்து வருகிறாா்கள். ஆனால் அவா்களுக்கு மிக குறைவான தினக் கூலிதான் வழங்கப்படுகிறது. அதுவும், உள்ளாட்சி அமைப்புகளால் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் அவ்வப்போது அவா்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களுக்கு உடனடியாக உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தினக்கூலி என்பதற்குப் பதிலாக, மாத ஊதிய வழங்கிடவேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ. 21,000 வழங்கிட வேண்டும். , பணிநிரந்தரமும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.