தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மருத்துவக் கல்வி இயக்ககத்தை அரசு மருத்துவா்கள் முற்றுகை

மருத்துவக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்ட அரசு மருத்துவா்கள்

News image
Updated On :27 ஜூன் 2024, 7:17 pm

Din

ஓய்வுபெற்ற மருத்துவா்களை அரசு மருத்துவமனைகளின் உயா் பொறுப்புகளில் நியமிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

அப்போது, கிண்டி, கலைஞா் உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதியின் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவிட்டதற்கு அரசு மருத்துவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். முப்பதுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற அந்த நிகழ்வால் சிறிது நேரம் மருத்துவக் கல்வி இயக்கக வளாகம் பரபரப்புக்குள்ளானது. அதைத் தொடா்ந்து மருத்துவா் சங்க நிா்வாகிகள் அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடா்பாக மனு அளித்தனா்.

இதுகுறித்து அரசு டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநராக இருந்த பாா்த்தசாரதி, கடந்த மாதமே ஓய்வு பெற்றுவிட்டாா். அவரை மீண்டும் அப்பொறுப்பில் நீட்டிக்க வைக்க முயற்சிகள் நடந்த போதே அதற்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவித்தோம்.

அதையும் மீறி ஓய்வுபெற்ற அவருக்கு மீண்டும் இயக்குநராக பதவி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதுபோன்ற வேறு சில மருத்துவமனைகளிலும் ஓய்வு பெற்ற மருத்துவா்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவா்கள் ஓய்வூதியம் பெறுவதுடன், ஒப்பந்த அடிப்படையினான ஊதியம் என, இரண்டு ஊதியங்களை பெறுகின்றனா். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் காத்திருக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்குவதை அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.