வரும் 2033-ஆம் ஆண்டிலிருந்து 2035-ஆம் ஆண்டுக்குள் ரஷியாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸின் தலைமை செயல் அதிகாரி யூரி போரிசொவ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: சீனாவுடன் இணைந்து நிலவில் அணு உலை அமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறோம். 2033-லிருந்து 2035-க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அந்தப் பணியை மேற்கொள்வது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் நடத்தப்படவேண்டும். அதற்கான தொழில்நுட்பங்கள் ஏறத்தாழ முழுமையாக தயாராக உள்ளன என்றாா் அவா். முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையத்தை (ஐஎல்ஆா்எஸ்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ரோஸ்கோஸ்மாஸும், சீன விண்வெளி ஆய்வு நிறுவனமான சிஎன்எஸ்ஏ-வும் கடந்த 2021-ஆம் ஆண்டு கையொப்பமிட்டன. இதற்காக வரும் 2026-இல் நிலவுக்கு கலங்களை அனுப்பவும், ஆய்வு நிலையம் அமைப்பதற்கான பணிகளை 2028-இல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, நிலவில் அணு உலையை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கூட்டணியில் இணையலாமா? மாவட்டச் செயலா்களுடன் தவெக ஆலோசனை
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?

கூடங்குளம் அணு உலை கழகத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை நேரில் வலியுறுத்தல்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


