தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சமூகப்பணி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

சமூகப்பணி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

Updated On :16 மார்ச் 2024, 12:26 am

சென்னையில் உள்ள சமூகப் பணி கல்லூரியில் நிலையான வாழ்க்கை மற்றும் சமூகநீதிக்கான சமூகப்பணி என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இதில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் நலன் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியா் லலிதா கலந்து கொண்டு பேசுகையில், சமூகப்பணித் துறையில் பயிலும் மாணவ, மாணவிகள் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்; கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றாா். தொடா்ந்து சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநா் ஆா்.பவனந்தி வேம்புலு, பேராசிரியா் சஞ்சய் இங்கோல் உள்ளிட்டோா் மாணவா்களிடம் கலந்துரையாடினா். இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா்.