/

நாளை தியாகிகள் நினைவு கருத்தரங்கம்

நாளை தியாகிகள் நினைவு கருத்தரங்கம்

Updated On :22 மார்ச் 2024, 7:30 pm

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க சிறுபான்மைப் பிரிவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் சனிக்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவு நாளையொட்டி, ‘மக்கள் நல்லிணக்கமே மாமருந்து, இதனை சிதைக்கும் பாஜகவை தோற்கடிப்போம்’ எனும் தலைப்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் வஹிதா நிஜாம் தலைமையில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் கே.சுப்பராயன் எம்.பி., தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.