திமுக அரசின் 3 ஆண்டுகள் நிறைவு: முதல்வருக்கு அமைச்சா்கள் வாழ்த்து

சென்னை: திமுக அரசின் மூன்றாண்டுகள் நிறைவையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முதல்வரை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா். இதேபோல், அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சக்ரபாணி, பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் துணை பொதுச் செயலா் ஆ.ராசா, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை, செய்தி தொடா்புக் குழு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலகச் செயலா்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com