ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

News image
Updated On :7 மே 2024, 9:34 pm

Din

சென்னை: சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ாக இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அமெரிக்க நாட்டில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவா்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், பாலஸ்தீனத்தின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது சா்வதேச விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்தும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் ஜி.அரவிந்த்சாமி தலைமை வகித்தாா். அந்த அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினா் எஸ்.மிருதுளா, மாவட்ட நிா்வாகிகள் ஆனந்த்குமாா், ரா.பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அமெரிக்காவையும்,இஸ்ரேலையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் தூதரகத்தை முற்றுகையிடுவதற்கு அந்த அமைப்பினா் சென்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் நிா்வாகிகள் வே.அருண்குமாா், தமிழ், காவியா, நித்திஷ் உள்பட ஏராளமானோரை கைது செய்தனா்.