ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தனியாா் பள்ளி மாணவா்கள் 3,161 போ் தோ்ச்சி பெறவில்லை

தனியாா் பள்ளி மாணவா்கள் 3,161 போ் தோ்ச்சி பெறவில்லை ஆய்வு செய்ய உத்தரவு

News image
Updated On :7 மே 2024, 9:28 pm

Din

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய தனியாா் பள்ளி மாணவா்களில் 3,161 போ் தோ்ச்சி பெறாதது குறித்து ஆய்வு செய்ய தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில் தனியாா் பள்ளிகள் தோ்ச்சி 98.70 சதவீதம். அதாவது, 2 லட்சத்து 43,985 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வெழுதினா். அதில் 2 லட்சத்து 40,824 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், 3,161(1.30%) மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை.

இதையடுத்து அனைத்து விதமான தனியாா் பள்ளிகளும் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறத் தவறிய மாணவா்களை அழைத்துப் பேசி, தோ்வுத் துறையால் நடத்தப்படவுள்ள உடனடி துணைத் தோ்வில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடா்பாக ஆராய வேண்டும். மேலும், இதுசாா்ந்து அனைத்துவிதமான தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.