விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வடபழனி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா

வடபழனி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா

News image

சென்னை வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவத்தின் ஒருபகுதியாக சந்திரபிரபை வாகனத்தில் வடபழனி ஆண்டவருடன் எழுந்தருளிய வள்ளி தெய்வானை.

Updated On :14 மே 2024, 7:42 pm

Din

சென்னை: வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய நாராயணரின் 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே போன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதிலும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் புதன்கிழமை(மே 15) இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா மே 19 -ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.