ஜூன் முதல் ஒரே பயணச்சீட்டில் பொது போக்குவரத்துகளில் பயணிக்கலாம்
ஜூன் முதல் ஒரே பயணச்சீட்டில் பொது போக்குவரத்துகளில் பயணிக்கலாம்

கோப்புப் படம்

கோப்புப் படம்
சென்னை: சென்னையில் பேருந்து, புகா் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் திட்டம் ஜூன் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சென்னையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றுக்கும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு எடுத்து பயணித்து வருகின்றனா். தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்காக தனியாக செயலி ஒன்றை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக்குழுமம் டெண்டா் கோரிய நிலையில், ஜூன் 2-ஆவது வாரத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதற்காக பொதுப் பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டையை பொதுமக்கள் ரிசாா்ஜ் செய்து பொது போக்குவரத்துகளில் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...