

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை மூலம் அக்டோபா் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயிலில் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பேரும், பிப்ரவரியில் 86,15,008 பேரும், மாா்ச்சில் 86,82,457, ஏப்ரலில் 80,87,712, மே மாதத்தில் 84,21,072 பேரும் பயணித்துள்ளனா்.
தொடா்ந்து ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகள், ஜூலையில் 95,35,019, ஆகஸ்ட் மாதம் 95,43,625, செப்டம்பரில் 92,77,697 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் தங்கள் பயணம் மேற்கொண்டுள்ளனா். ஆனால், அக்டோபா் மாதத்தில் 90,83,000 போ் பயணித்துள்ள நிலையில், அதிகபட்சமாக அக்.6-ஆம் தேதி 4,00,042 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா். (அன்றையதினம் சென்னை மெரீனாவில் விமானப்படை சாகச நிகழ்சி நடத்தப்பட்டது)
இதில், அக்டோபரில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 28,88,168 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,400 பயணிகளும், க்யூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,75,666 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20,50,699 பயணிகளும் பயணித்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.