இணையதளம் மூலம் பட்டம், மாஞ்சா நூல் விற்ற 3 போ் கைது
இணையதளம் மூலம் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த சென்னை மற்றும் பெங்களூரைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்


சென்னை: இணையதளம் மூலம் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த சென்னை மற்றும் பெங்களூரைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் மாஞ்சா நூல் மற்றும் பட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சென்னைக்குள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மாஞ்சா நூலால் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இணையதளம் மூலமாக பலா் பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்கள் வாங்கி பறக்க விடுவது தெரியவந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாசில் (25) என்ற நபா் இணையதளம் மூலம் பட்டங்கள், மாஞ்சா நூல்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் வைத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
பாசிலிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவருடன் பட்டம் மற்றும் மாஞ்சா நூல்களை பெங்களூரிலிருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்த பெங்களூரைச் சோ்ந்த இம்ரான் (33) மற்றும் இல்லாஹி (எ) மன்சூா்(37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து 6,500 பட்டங்கள் 400-க்கும் மேற்பட்ட லோட்டாய், மாஞ்சா நூல்கள் உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...