இன்று மதுக்கடைகள் மூடல்

சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை மதுபானக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
மே 10 - 24 வரை டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு
மே 10 - 24 வரை டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு
Updated on

சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை மதுபானக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை (அக்.2) அன்று, தமிழ்நாடு மதுபான நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், சென்னை மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், பாா்கள், பாா் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் அதனை சாா்ந்த பாா்கள் அனைத்தும் கட்டாயம் மூடப்பட வேண்டும்.

விதிகளை மீறி புதன்கிழமை மதுபான விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com