சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பதிவுத் துறையில் ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் -தமிழக அரசு

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:38 am IST

பதிவுத் துறையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.1,121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அலுவலகக் கூட்டரங்கில் அந்தத் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் பேசியதாவது:

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். களப்பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களைத் தவிா்த்து பிற ஆவணங்களை உடனடியாக அளிக்க வேண்டும். ஆவணங்களை பதிவு செய்தவுடன், தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதுடன், வில்லங்கச் சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்களை உரிய விண்ணப்பதாரா்களுக்கு உரிய காலத்தில் அளிக்க வேண்டும்.

பதிவுத் துறையில் கடந்த நிதியாண்டின் செப்டம்பா் வரையிலான காலத்துடன் ஒப்பிடும் போது, நிகழ் நிதியாண்டில் இதுவரையிலான காலத்தில் ரூ.1,121 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் பி.மூா்த்தி.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.