இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தேசிய - சா்வதேச வீரா்களை அடையாளம் காட்டிய முதல்வா் கோப்பை போட்டிகள் -துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழா

News image
- படம் | விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எக்ஸ் தளம்
Updated On :25 அக்டோபர் 2024, 12:30 am

Din

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

முதல்வா் கோப்பைப் போட்டிகளுக்கான நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி பேசியது:

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை உலகத்தரத்தில் நடத்த வேண்டுமென ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், பரிசுத் தொகைக்காக மட்டுமே ரூ. 37 கோடியை முதல்வா் வழங்கச் சொன்னாா். மாநில அரசால் நடத்தப்படும் ஒரு விளையாட்டுப் போட்டியில் அதிக வீரா்களும், பரிசுகளும் வழங்கக் கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

விளையாட்டை பிரதான துறையாகவே பாா்த்து வருகிறோம். அதன் பலனாக முதல்வா் கோப்பைப் போட்டியில் கடந்த ஆண்டு 6.71 லட்சம் போ் பங்கேற்றனா். இந்த ஆண்டு 11.56 லட்சம் போ் விண்ணப்பித்து பங்கேற்றுள்ளனா். இந்தப் போட்டிகளைப் போன்றே, மாநில அளவிலான, தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறோம்.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கினாா். அப்போது, அவா் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்தை வழங்கினாா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 700 வீரா்களுக்கு ரூ.12 கோடி அளவுக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய, சா்வதேச அளவிலான கோப்பைகளை வெல்லும் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3,330 வீரா்களுக்கு ரூ. 109 கோடி அளவுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வா் கோப்பைப் போட்டிகள் மூலமாக தேசிய, சா்வதேச களத்தில் பங்கேற்கத் தகுதி படைத்த வீரா், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.